Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ் சினிமாவின் ஹீரோக்களுக்கு ஏற்ற காமெடியன் யார்? ஸ்பெஷல்

தமிழ் சினிமாவில் என்ன தான் ஹீரோ, ஹீரோயினுக்கு கெமிஸ்ட்ரி இருந்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் அலுப்புத்தட்ட ஆரம்பித்து விடும். அந்த இடத்தில் எனர்ஜி டானிக்காக வருவது நகைச்சுவை நடிகர்கள் தான்.

அதிலும் ஒரு சில நகைச்சுவை நடிகர்கள், ஒரு சில ஹீரோக்களுடன் இணைந்தால் ஹீரோயின் கெமிஸ்ட்ரி கூட தோற்றுவிடும், இவர்கள் செய்யும் கலாட்டாக்களில் மக்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிடுவார்கள். அவர்களை பற்றிய தொகுப்பு தான் இந்த பகுதி.

சத்யராஜ்-கவுண்டமணி

இன்னும் எத்தனை வருடம் தமிழ் சினிமா இருந்தாலும் சத்யராஜ்-கவுண்டமணியின் காம்பினேஷனை உடைக்கவே முடியாது, அந்த அளவிற்கு லொள்ளு செய்து விடுவார்கள். கோயமுத்தூர் குசும்பு என்பதற்கான அகராதியே இவர்கள் தான். பங்காளி, மலபார் போலிஸ் என பல படங்களில் அதகளம் செய்வார்கள். இவர்கள் கூட்டணியில் வந்த வசனங்களான ‘பேப்பர் ரோஸ்ட் சாப்பிட்டா லிவருக்கு நல்லது, கபாலி குழந்தைங்கன்னு பார்க்காத கால்ல விழு, நாங்கெல்லாம் ராவான ரவுடி’ வசனங்கள் இன்றும் சமூக வலைத்தளங்களில் வைரல்.

ரஜினிகாந்த்-செந்தில்

ரஜினிகாந்த் மிகவும் செண்டிமெண்ட் விரும்பி, இவருடைய படங்களில் ஒரு சில விஷயங்களை வாண்ட்டாக திணிப்பார். அப்படி ஒரு விஷயம் தான் செந்தில். செந்தில் ரஜினி படத்தில் இருந்தாலே அந்த படம் சூப்பர் ஹிட் தான் என ஒரு பேச்சு இருந்தது, அதை உண்மையாக்கும் பொருட்டு முத்து, அருணாச்சலம், படையப்பா, வீரா என பல படங்களில் செந்திலுடன் இணைந்து கலக்கியிருப்பார்.

பார்த்திபன்-வடிவேலு

பார்த்திபன் இயல்பாகவே கலாய்த்து தொங்கவிடுபவர், அவர் கையில் வடிவேலு போன்று ஒரு கலைஞன் கிடைத்தால் விடுவாரா? வடிவேலு பார்த்திபனை கண்டாலே தெறித்து ஓடுவார், அவர் மாட்டக்கூடாது என திரையை தாண்டி ரசிகனும் சிரித்துக்கொண்டே நினைப்பான், ஆனால், அவர் மாட்டினால் தானே கிக்கே!...வெற்றி கொடி கட்டு, பாரதி கண்ணம்மா, குண்டக்க மண்டக்க என பல படங்களில் இருவரும் கலக்கியிருப்பார்கள்.

விஜய்-விவேக்

விஜய்-விவேக் பெரிதாக ஒன்றும் இல்லையே என பலரும் நினைக்கலாம், ஆனால், விஜய் தன் திரைப்பயணத்தில் வளர்ந்து வரும் போது நடித்த பல வெற்றி படங்களில் விவேக் தான் கலக்கியிருப்பார். ப்ரியமானவளே, பத்ரி, யூத், திருமலை, ஷாஜகான் என சொல்லிக்கொண்டே போகலாம். இவர்கள் கூட்டணியில் வெளிவந்த 80% படங்கள் சூப்பர் ஹிட் தான்.

ஜீவா-சந்தானம்

சூப்பர் ஸ்டார் முதல் சுள்ளான் ஸ்டார் வரை கவுண்டர் கொடுப்பவர் சந்தானம் தான், கமல்ஹாசனை தவிர இவர் கலாய்க்காத நடிகர்களே இல்லை, ஏன் கமல்ஹாசனை கூட தன் படங்களில் ஒரு சில இடங்களில் லைட்டாக கலாய்த்து விடுவார். ஆனால், இவரையே கலாய்க்கும் ஒரு நடிகர் என்றால் ஜீவா தான். சிவா மனசுல சக்தி, சிங்கம் புலி, என்றென்றும் புன்னகை என அனைத்து படங்களிலுமே சந்தானம் தான் ஜீவாவிடம் செம்ம கலாய் வாங்குவார்.

சிவகார்த்திகேயன்-சூரி

இன்றைய கிராமப்புற இளைஞர்களுக்கு ஏற்ற ஜோடி என்று கூறிவிடலாம், லந்தாக கவுண்டர் கொடுக்கும் நடுத்தர இளைஞர்களை இந்த ஜோடிகள் நியாபகப்படுத்தும். சிவகார்த்திகேயனிடம் கவுண்டர் கொடுப்பது என்பது சாதரண விஷயமில்லை, ’இதெல்லாம் நான் சொன்ன சிரிச்சுடுவாங்கப்பா’ என அவரையே ஓவர் டேக் செய்து அப்லாஸ் வாங்குவது தான் சூரியின் ஸ்பெஷல்.

-மணிகண்டன்

காதலும் கடந்து போகும் படத்தின் சிறப்பு விமர்சனம் பார்க்க