Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

2016ல் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யாத படங்கள் ஒரு பார்வை- ஸ்பெஷல்

2016 முடிய இன்னும் 14 நாட்களே உள்ளது. இந்நிலையில் இந்த வருடம் தமிழ் சினிமா எப்படி என்று பல ஆய்வுகள் வந்துக்கொண்டே இருக்கின்றது, வழக்கம் போல் இந்த வருடமும் ஹிட் வரிசை மிகவும் குறைந்து தான் உள்ளது. இந்நிலையில் இந்த வருடம் ரசிகர்களிடம் நல்ல எதிர்ப்பார்ப்பை உருவாக்கி, அதை பூர்த்தி செய்யாத படங்கள் எது என்பதை பார்ப்போம்.

தாரை தப்பட்டை

பாலா-இளையராஜா என பிரமாண்ட கூட்டணி, இளையராஜாவின் 1000வது படம் என பலத்த எதிர்ப்பார்ப்புடன் வெளிவந்த தாரை தப்பட்டை, மோசமான திரைக்கதையால் படுதோல்வியடைந்தது.

மிருதன்

தமிழ் சினிமாவின் முதல் ஜாம்பி படம் என பெரிய எதிர்ப்பார்ப்பை உருவாக்கிய மிருதன் முதல் பாதியில் மிரட்டி, இரண்டாம் பாதியில் காதலை நோக்கி பயணித்து ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் போனது.

இது நம்ம ஆளு

கண்டிப்பாக இந்த படம் மெகா ஹிட் தான் என பலரும் கூறினார்கள், பாண்டிராஜ் முதல் இந்த படத்தை பார்த்த பல இயக்குனர்கள், ஏன் சூர்யா கூட சொன்னார், ஆனால், படம் ரசிகர்கள் எதிர்ப்பார்த்த அளவிற்கு இல்லை என்பதே உண்மை.

தொடரி

இந்திய சினிமாவின் முதல் ட்ரையின் படம் என்று தான் விளம்பரமே கொடுத்தார்கள், படத்திலும் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லை, ஆனால், மோசமான லாஜிக் மீறலால் படம் தோல்வியை தழுவியது.

திருநாள், கவலை வேண்டாம், போக்கிரி ராஜா

ஜீவா இஸ் பேஸ் என்று தான் சொன்னார்கள், வரிசையாக படங்களாக நடித்து இறக்கினார், ஆனால், இதில் எந்த படமும் ஓடாமல் ஒரே வருடத்தில் ஹாட்ரில் ப்ளாப் கொடுத்து ரசிகர்களை ஏமாற்றினார்.

நாயகி

சோலோ நாயகியாக வெற்றி கொடுத்தே தீருவேன் என த்ரிஷா, களத்தில் இறங்கி பெரிய எதிர்ப்பார்ப்பை உருவாக்கி நம்மை மிகவும் சோதித்த படம் தான் நாயகி.

வாகா

விக்ரம் பிரபு மார்க்கெட் அதள பாதாளத்தில் உள்ளது, ஒரு ஹிட் கொடுத்தால் தான் மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க முடியும் என்ற நிலையில் ஹரிதாஸ் என்ற தரமான படத்தை கொடுத்த இயக்குனருடன் கைக்கோர்த்தும் தோல்வியை தான் தந்தது இந்த வாகா.

றெக்க

விஜய் சேதுபதியின் முதல் மாஸ் ஆக்‌ஷன் படம் றெக்க, அதிலும் அவரின் போட்டியாளர் சிவகார்த்திகேயனுடன் களத்தில் போட்டிப்போட்டார், ஆனால், படம் எதிர்ப்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.

பெங்களூர் நாட்கள்

ஆர்யா ஒரு ஹிட் கொடுத்து பல வருடம் ஆகிவிட்டது, இந்நிலையில் மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன பெங்களூர் டேஸ் படத்தின் ரீமேக் தான் இந்த பெங்களூர் நாட்கள், ஆனால், இந்த படம் மலையாளம் அளவிற்கு நல்ல நடிகர்கள் தேர்வு இல்லாததால் படுதோல்வியடைந்தது.

காஷ்மோரா

ட்ரைலரை பார்த்து இந்த படம் வசூலில் பெரும் சாதனை படைக்கும் என்று எதிர்ப்பார்த்தார்கள், கார்த்தியும் பல கெட்டப்புகளில் தோன்ற, பெரும் எதிர்ப்பார்ப்புடன் வந்து தோல்வியை தழுவியது.

இறைவி

கார்த்திக் சுப்புராஜ் படம் என்றாலே அது நல்ல படம் தான் என்று கூறும் அளவிற்கு அவரின் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது, ஆனால், இறைவி நல்ல கதைக்களம் என்றாலும் படத்தின் நீளம், மெதுவாக நகரும் திரைக்கதை என ரசிகர்களிடம் பெரிதும் வரவேற்பு பெறவில்லை.

அரண்மனை-2

வசூல் மழை கொட்டினாலும், ஒரே டெம்ப்ளேட் கதை என்பதால் ஒரு சில ரசிகர்களுக்கு இந்த படம் சலிப்பு தட்டியது.

கபாலி

என்னாது, கபாலியா? என்று நீங்கள் கோபப்படுவது தெரிகிறது, படம் மிகவும் நன்றாக இருந்தது, ரஜினி தளபதிக்கு பிறகு நடிப்பிற்கு நிறைய ஸ்கோப் இருந்தது, வசூல் மழை, இந்திய சினிமாவே அதிர்ந்த ஓப்பனிங் என்று என்ன சொன்னாலும் சாதரண ஒரு ரஜினி ரசிகர் எதிர்ப்பார்த்த நெருப்புடாவாக கபாலி இல்லை என்பதே உண்மை.

இதேபோல் இந்த வருடம் உங்களுக்கு பெரிதும் எதிர்ப்பார்ப்பு ஏற்படுத்தி ஏமாற்றிய படங்கள் எது என்பதை கமெண்ட்டில் தெரிவியுங்கள்.