Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாகுபலி A முதல் Z வரை இத்தனை பிரமாண்டத்திற்கு என்ன காரணம்- ஸ்பெஷல்

இந்திய சினிமா ரசிகர் என்பதை தாண்டி உலக சினிமா ரசிகர்களே பாகுபலியை காண ஆவலுடன் காத்திருக்கின்றனர். நாளை உலகம் முழுவதும் சுமார் 9500 திரையரங்குகளில் இப்படம் வெளிவரவுள்ளது.

தெலுங்கு படம் என்றாலே கலர் கலர் சட்டை, அந்தர் பல்டி அடிக்கும் கார், பைக் என கிண்டல் செய்த காலம் போய், ஒட்டுமொத்த திரையுலமும் பாகுபலியை வியந்து பார்த்து வருகின்றது.

அப்படி என்ன இந்த படத்தில் உள்ளது? என யோசித்தால், Troy, lord of the rings என உலகையே திரும்பி பார்க்க வைத்த போர் படங்கள் போல் நம் ஊரில் இதுவரை ஏன் படம் வரவில்லை என்ற ஏக்கம் தான்.

இதேபோல் ஒரு ஏக்கம் தான் ராஜமௌலிக்கும், சிறு வயதில் தன் தந்தை கூறிய ஒரு கதையில் தாக்கம் தான் இன்று பாகுபலி உருவாக ஓர் காரணம். அதற்கு ஒரு சிறு விதையாக மஹதீரா படத்தில் ஒரு ப்ளாஷ்பேக் காட்சியில் மட்டும் சில விஷயங்களை செய்திருப்பார்.

அதையே படமாக எடுத்தால் என்ன என்று தான் தன் தந்தை விஜயேந்திர பிரசாத் உதவியுடன் பாகுபலியை உருவாக்கினார், ஆனால், 5 வருடம் ஒரு முன்னணி நடிகர் கால்ஷிட் தருவாரா? ராஜமௌலி என்ற ஒரு மனிதரை நம்பி பிரபாஸ் கால்ஷிட் கொடுத்தார்.

ப்ரீ-ப்ரோடைக்‌ஷன் மட்டுமே ஒரு வருடம் நடந்தது, சுமார் 2000 பேருக்கு மேல் இந்த படத்தில் பணியாற்றினர், 2 வருடத்திற்கு பிறகு பாகுபலி ஜுலை 10-ம் தேதி 2015-ம் ஆண்டு உலகம் முழுவதும் வெளிவந்தது.

யாருமே இப்படி ஒரு படத்தை எதிர்ப்பார்க்கவில்லை, தெலுங்கு தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் ஏதோ இது ஒரு டப்பிங் படம் என்பது போலவே வந்து சென்றனர்.

நாளுக்கு நாள் கூட்டம் கூட பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார் என்ற கேள்வியுடன் படம் பட்டித்தொட்டியெல்லாம் தீயாக பற்றியது, எல்லோரும் யார் இந்த ராஜமௌலி என கூகுளில் முகாமிட்டனர்.

படமும் அனைத்து பகுதிகளிலும் ஹிட் அடிக்க முதல் பாகமே ரூ 600 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது, பாகுபலி முதல் பாகத்தின் போதே இரண்டாம் பாகத்தில் 50% வேலைகள் முடிந்துவிட்டது.

இதன் பிறகு அனுஷ்கா உடல் எடை அதிகரிக்க, ராஜமௌலிக்கும் அவருக்கு சண்டை வந்தது என்று கூட கிளப்பி விட்டனர், ஆனால், படக்குழுவினர்களின் ஒற்றுமையே இப்படி ஒரு பிரமாண்டத்தை உருவாக்க காரணமாக அமைந்தது.

உலக அளவில் பல இடங்களில் இந்திய சினிமாவின் வியாபாரத்தை பாகுபலி திறந்து வைத்தது, எப்படியும் நாளை வரவிருக்கும் இப்படம் முதல் ரூ 1000 கோடி கிளப்பில் இணையும் இந்தியப்படம் என்ற பெயரை வாங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இப்படி ஒரு பிரமாண்டத்தை உருவாக்கி இந்திய சினிமாவிற்கே பெருமை சேர்க்கவிருக்கும் ராஜமௌலி மற்றும் அவருடை டீமிற்கும் சினிஉலகம் தன் வாழ்த்துக்களை கூறுகின்றது.