Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பெரிய இயக்குனர்களுடன் கூட்டணி, இருந்தாலும் தோல்வி கொடுத்த ஹீரோக்கள்- ஸ்பெஷல்

தமிழ் சினிமாவை பொறுத்தவரை இந்த ஹீரோ, இந்த இயக்குனருடன் இணைந்தால் சூப்பர் ஹிட் தான் என்று ஒரு பேச்சு இருக்கும். அப்படி ஒரு கூட்டணி அமைந்தால் படம் வேற லெவலில் இருக்கும் என்று எதிர்ப்பார்த்து காத்திருப்பார்கள், ஆனால், அப்படி ஒரு கூட்டணி அமைந்து படம் தோல்வியை சந்திப்பது கொடுமையிலும் கொடுமை, அப்படிப்பட்ட கூட்டணி பிளவு குறித்து பார்ப்போம்.

ரஜினி-கே.எஸ்.ரவிக்குமார்

படையப்பா, முத்து என இரண்டு மெகா ஹிட் படங்களை கொடுத்தது இந்த கூட்டணி. கோச்சடையான் படம் சரியாக போகவில்லை என்றாலும், வசனத்திலும், திரைக்கதையிலும் ரவிக்குமார் பட்டையை கிளப்பியிருப்பார். ஆனால், இவர்கள் கூட்டணியில் வெளிவந்த லிங்கா பெரும் தோல்வி அடைந்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

கமல்ஹாசன்-கே.எஸ்.ரவிக்குமார்

ஒரே நேரத்தில் ரஜினி, கமலுடன் வேலைப்பார்க்கும் திறமை ரவிக்குமாரிடம் மட்டுமே உள்ளது. தெனாலி, அவ்வை சண்முகி, தசாவதாரம், பஞ்ச தந்திரம் என தொடர் வெற்றிகளை கொடுத்த இந்த கூட்டணி மன்மதன் அம்பு படத்தில் சறுக்கியது.

அஜித்-சரண்

காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம் என அஜித்தின் கெரியரில் மறக்க முடியாத மாஸ் ஹிட்டுகளை கொடுத்தவர் சரண். அப்படித்தான் எல்லோரும் அசல் படத்தை நம்பி எதிர்ப்பார்த்து ஏமாற்றம் அடைந்தனர்.

விஜய்-தரணி

இளைய தளபதி விஜய் திரைப்பயணத்தையே திருப்பி போட்ட படம் கில்லி. இப்படத்தின் வெற்றி என்பது தமிழ் சினிமாவிற்கே ஒரு ட்ரெண்ட் செட்டாக அமைந்தது. ஆனால், இந்த கூட்டணியின் குருவி பெரும் தோல்வியை சந்தித்து அனைவரையும் அதிர்ச்சியாக்கியது.

சூர்யா-கே.வி.ஆனந்த்

சூர்யாவை ஒரு மாஸ் ஹீரோக்கள் வட்டத்திற்குள் கொண்டு வந்த படங்களில் அயன் ஒரு முக்கிய பங்கு. ஆனால், இதை தொடர்ந்து பெரும் பொருட்செலவில் இவர்கள் கூட்டணியில் வந்த மாற்றான் படு தோல்வியடைந்தது.

விக்ரம்-ஏ.எல்.விஜய்

விக்ரம் கடும் சறுக்கலில் இருந்த போது அவரை தூக்கிவிட்ட படம் தெய்வத்திருமகள். இப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்க ரசிகர்கள் இவர்கள் கூட்டணியில் அடுத்து தாண்டவம் படத்தை மிகவும் எதிர்ப்பார்த்து காத்திருக்க, அப்படம் படுதோல்வியை அடைந்தது.