Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாகுபலி கதைக்கு பின்னால் ஒரு பேரழகியின் சோகம்! வெளிவராத மர்மம்

கோவில் மணிச்சத்தம் காதில் ரீங்காரம் இடுவது போல இன்னமும் பாகுபலி ஒலி அலைகள் பற்றி பலரும் பேசுவதை கண்ணால் பார்க்க முடிகிறது. காதால் கேட்கமுடிகிறது.

கடந்த வாரம் வெளியான பாகுபலி படம் நன்கு வசூல் போய்க்கொண்டிருக்கின்ற நேரத்தில் படம் பற்றிய சில தெரியாத தகவல்களும் வெளிவந்து ஆச்சர்யப்படவைக்கின்றன.

படம் முழுக்க வரலாற்று கதாபாத்திரமாதலால் உடை, அணிகலன்கள் என மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருந்தது. அதிலும் ராஜமாதா சிவகாமிக்கும், தேவசேனாவுக்கும் தான் நகைகள் வடிவமைப்பதில் பெரிய ரிஸ்க் இருந்ததாம்.

ஹைதாரபாத்தை சேர்ந்த அந்த பிரத்யேக நகை வடிவமைப்பாளர்களின் கைவினைக்கு பின் ஒரு சுவாரசியமான தகவலும் இருக்கிறது. பாகுபலி படத்திற்காக உருவாக்கப்பட்ட நகைகளுக்கு அம்ராபலி கலெக்‌ஷன்ஸ் என்கிறார்கள்.

படப்பெயரும், நகைப்பெயரும் பொருத்தமாக இருக்கிறதல்லவா. யார் இந்த அம்ராபலி என கேள்வி வந்தபோது தான் தெரிந்தது இவள் ஒரு பேரழகியாம்.

கி.மு 500 ம் ஆண்டு இவள் வைஷாலியில் வாழ்ந்தவள் அந்த அழகி. இவளின் அழகில் மயங்கிய அரசன் அவளை அனைவருக்கு சொந்தமாக்க விரும்பி அவளின் காதலனை கொன்று அரசவையின் நர்த்தகியாக்கினானாம்.

மனஅமைதிக்காக பௌத்தமத துறவியாக மாறிய அவளின் குற்றமற்ற தன்மையை புத்தரே அங்கீகரித்தாக சில தகவல்கள் சொல்கிறது.

அப்போதே இந்த அம்ராபலியின் வாழ்க்கையை படமாக்கியுள்ளது பாலிவுட் சினிமா. அம்ராபலியாக நடித்தவர் வேறு யாருமல்ல ஹேமமாலினி தான்.