Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இளைய தளபதியின் ஹீரோயின்கள்? பிறந்தநாள் ஸ்பெஷல்

இளைய தளபதி விஜய்யின் பிறந்தநாளுக்கு இன்னும் 12 நாட்களே உள்ளது. தமிழகம் முழுவதும் பல இடங்களில் பேனர் போஸ்டர் என ரெடியாகிவிட்டனர், இந்நிலையில் அவரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் குறித்த ஸ்பெஷல் தொகுப்பில் அவர் இதுவரை நடித்த படங்களின் எந்த ஹீரோயினுடன் அதிக முறை நடித்துள்ளார் என்ற விவரங்களை பார்ப்போம்.

விஜய்-சங்கவி

90களில் ரசிகர்களின் பேவரட் ஜோடியாக இருந்தது விஜய்-சங்கவி ஜோடி தான், இவர்கள் கூட்டணியில் ரசிகன், விஷ்ணு, கோயமுத்தூர் மாப்பிள்ளை ஆகிய படங்கள் திரைக்கு வந்துள்ளது.

விஜய்-சிம்ரன்

விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களின் மிக பேவரட் ஜோடி விஜய்-சிம்ரன் தான், இவர்கள் கூட்டணியின் ஒன்ஸ் மோர், துள்ளாத மனமும் துள்ளும், ப்ரியமானவளே, உதயா ஆகிய படங்கள் வெளிவந்துள்ளது, இதுமட்டுமின்றி நேருக்கு நேர் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக சிம்ரன் நடித்தார், இந்த படத்தில் விஜய்யும் இருந்தது குறிப்பிடத்தக்கது, பின் யூத் படத்தில் ஒரு பாடலுக்கு விஜய்யுடன் செம்ம குத்தாட்டம் போட்டிருப்பார்.

விஜய்-த்ரிஷா

ஒரு சில ஜோடிகள் இணைந்தாலே ஹிட் தான் என்று சொல்வார்கள், அப்படி விஜய்-த்ரிஷா ஜோடி ஒரு கலக்கு கலக்கியது, இவர்கள் கூட்டணியில் திருப்பாச்சி, கில்லி, குருவி, ஆதி ஆகிய படங்கள் திரைக்கு வந்தது.

விஜய்-ரம்பா

விஜய் நடிகை ரம்பாவுடன் நினைத்தேன் வந்தாய், என்றென்றும் காதல், மின்சார கண்ணா ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளார்.

விஜய்-அசின்

விஜய்-அசின் கூட்டணியில் போக்கிரி, சிவகாசி என்ற மாஸ் படமும், காவலன் என்ற கிளாஸ் படமும் வெளிவந்தது, அசின் திருமணத்திற்கு முன்பு நடித்த கடைசி தமிழ் படம் காவலன் தான்.

விஜய்-காஜல்

விஜய் சமீப காலமாக ஒரே ஹீரோயின்களுடன் நடிப்பது இல்லை, ஆனால், துப்பாக்கி ஹிட் காரணமாக ஜில்லாவை தொடர்ந்து தற்போது விஜய்-61லும் காஜலுடன் விஜய் ஜோடி சேர்ந்துள்ளார்.

விஜய்-சமந்தா

இளைய தளபதியுடன் சமந்தா கத்தி, தெறி என இரண்டு மெகா ஹிட் படங்களை கொடுத்துள்ளார், தற்போது விஜய்-61க்கு ரெடியாகிவிட்டார்.

இரண்டு முறை நடித்த ஹீரோயின்கள்

  1. ஜோதிகா- குஷி, திருமலை
  2. ஜெனிலியா- சச்சின், வேலாயுதம்
  3. தேவயானி- நினைத்தேன் வந்தாய், ப்ரண்ட்ஸ்
  4. சுவலட்சுமி- லவ் டுடே, நிலாவே வா
  5. ஸ்வாதி- தேவா, செல்வா
  6. ஷாலினி- காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு
  7. ஹன்சிகா- வேலாயுதம், புலி
  8. கௌசல்யா- நேருக்கு நேரி, ப்ரியமுடன்

இது மட்டுமின்றி நயன்தாராவுடன் சிவகாசி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியது மட்டுமின்றி, வில்லு படத்தில் ஜோடியாகவும் நடித்தார்.

பாலிவுட் ஹீரோயின்களில் இன்று ஹாலிவுட் வரை கலக்கும் ப்ரியங்கா சோப்ரா விஜய்யின் தமிழன் படத்தின் அறிமுகமானவரே, மேலும் நெஞ்சினிலே படத்தில் நடித்த இஷா கோபிகர் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருந்தவர்.

மேலும், அனுஷ்கா, சினேகா, எமி ஜாக்ஸன், ஸ்ருதி, ரீமாசென், ஸ்ரேயா, இலியானா, கீர்த்தி சுரேஷ் ஆகிய பிரபல நடிகைகளுடன் ஒரு படத்தில் இணைந்து நடித்துள்ளார். தற்போது நித்யா மேனனுடன் விஜய்-61ல் நடித்துள்ளார்.