Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டாராக்கிய தருணங்கள் இது தான்

நயன்தாரா இன்று தமிழகம் தாண்டி தென்னிந்தியா முழுவதும் ஒலிக்கும் ஒரு பெயர். இவர் படம் என்றாலே நம்பி திரையரங்குகளுக்கு செல்லலாம் என ஒரு நடிகனுக்கு இணையாக வளர்ந்துள்ள வளர்ச்சி.

இப்படி ஒரு வளர்ச்சி நடிகனுக்கு என்றால் சாத்தியம், ஆனால், ஒரு பெண்ணாக கிளாமர் என்பதை நம்பாமல் கதை தேர்வின் மூலம் அனைவரையும் திரையரங்கிற்கு அழைத்து வரும் சக்தி நயன்தாரா ஒருவருக்கே சாத்தியம்.

கேரளாவில் இருந்து பஸ்ஸில் சென்னைக்கு ஆடிஷன் வந்தவர் தான் இந்த நயன்தாரா. ஐயா படத்தில் பள்ளி மாணவியாக தோன்றிய இவர் இரண்டாவது படமே சூப்பர் ஸ்டாரின் சந்திமுகியில் நடிக்கும் வரை உயர்ந்தார்.

என்ன தான் முன்னணி நடிகர்கள் படம், பிரமாண்ட ஹிட் படம் என்று நடித்தாலும் நயன்தாராவிற்கு என்று பெரிய பெயர் அந்த சமயத்தில் இல்லை, அந்த நேரத்தில் தான் வல்லவன் படத்தில் கமிட் ஆனார்.

படத்தில் லிப்-லாக் முத்தக்காட்சி, சிம்புவுடன் காதல், அந்தரங்க புகைப்படம் லீக் என வளர்ந்து வரும் ஹீரோயின்கள் யாருக்குமே வராத சங்கடங்கள் நயன்தாராவின் காலை சுற்றியது.

இந்த இடத்தில் வேறு எந்த ஹீரோயினாக இருந்தாலும் அடுத்த பஸ்ஸை பிடித்திருப்பார்கள், ஆனால், நயன்தாராவோ சற்றும் சளைக்காமல் இந்த பிரச்சனைகளை எல்லாம் எதிர்க்கொண்டார்.

சிம்புவை விட்டு பிரிந்து தொடர்ந்து படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வந்தார், பில்லா நயன்தாராவின் மார்க்கெட்டை உச்சத்திற்கு கொண்டு சென்ற படம் என்று கூறலாம்.

எல்லோருமே அந்த சமயத்தில் அஞ்சம் பிகினி உடையில் மிகவும் சர்வ சாதரணமாக நடித்து அசத்தினார், ஹாலிவுட் படத்தில் வரும் ஏஞ்சலினா ஜுலி போல் இவரின் கதாபாத்திரம் பில்லாவில் செம்ம அதிரடியாக அமைந்தது.

இதை தொடர்ந்து நயன்தாராவிற்கு தொடர்ந்து ஏறுமுகம் தான், ஆனால், இரண்டாவது முறையாக காதல் அவர் வாழ்க்கையை சீரழிக்க வந்தது, இந்த முறை பிரபுதேவா வடிவில்.

வில்லு படத்தின் போது பிரபுதேவாவிற்கும் இவருக்கும் காதல் ஏற்பட, அதை தொடர்ந்து நயன்தாரா இனி சினிமாவில் நடிக்கவே மாட்டேன் என்று கூறிக்கொண்டு தமிழ் சினிமாவை விட்டு விலகினார்.

இதனால், ரசிகர்கள் அனைவருக்கும் ஷாக் என்றாலும் நயன்தாராவிற்காக வருத்தப்பட்டு சோறு, தண்ணீர் இறங்காமல் இருக்கும் அளவிற்கு ரசிகர்கள் இல்லை, ஆனால், இப்படி ஒரு ஏக்கத்தையும் ரசிகர்கள் பலத்தையும் நயன்தாராவிற்கு கொடுத்தது மூன்றாவது இன்னிங்ஸ் தான் என்பது அவரே எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்.

ஆம், 4 வருடங்களுக்கு பிறகு நயன்தாரா மீண்டும் தமிழ் சினிமா களத்தில் இறங்குகின்றார், இந்த முறை மிகக்கவனமாக தன்னுடைய கதாபாத்திரம் அழுத்தமாக இருக்க வேண்டும், வெறுமென மரத்தை சுற்றி டூயட் பாடும் நாயகியாக இருக்கக்கூடாது என்பதில் நயன்தாரா கவனமாக இருந்தார்.

அப்படித்தான் ராஜா ராணி, மாயா, நானும் ரவுடி தான், டோரா என கலக்க ஆரம்பித்தார், ஒரு முன்னணி நாயகனே இத்தனை வருடம் கழித்து நடிக்க வந்து மார்க்கெட்டை பிடிக்க போராடும் சமயத்தில், சரியான கதை தேர்வால் முன்னணி நடிகர்கள் மட்டுமின்றி வளர்ந்து வரும் நடிகர்களுக்கு கூட ஜோடியாக நடித்து அசத்துகின்றார்.

சரி ஹீரோயின் படம் என்றாலே ஒன்று பேய் படம் இல்லை பெண்களுக்கான புரட்சிப்படம் என்றில்லாமல், மக்களின் பிரச்சனையை அறத்தில் இவர் பேசியதால் என்னவோ, நயன்தாராவை நடிகை என்பதை தாண்டி ரசிகர்கள் அனைவரும் தங்கள் வீட்டில் ஒருவராக பார்க்க தொடங்கிவிட்டனர்.

நாம் முன்பு சொன்னது தான் நயன்தாரா நடிக்க மாட்டேன் என்று சொன்னபோது அப்போது யாரும் சோறு, தண்ணீர் சாப்பிடாமல் இருப்பது இல்லை, ஆனால், இனி ஒரு முறை நயன்தாரா இப்படி ஒரு அறிவிப்புவிட்டார் இது நடந்தாலும் ஆச்சரியமில்லை, அந்த அளவிற்கு தன் ஆளுமையை நயன்தாரா நிரூபித்துவிட்டார். இப்போது சொல்லுங்கள் இவரை தவிர வேறு யாருக்கு இந்த பட்டம் பொருந்தும். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.