Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விசுவாசம் இயக்குனர் சிவாவுக்கு பின்னால் இப்படியும் ஒரு முக்கிய விசயம் !

அஜித்தின் அடுத்த படமான விசுவாசம் விரைவில் ஷூட்டிங் ஆரம்பமாகவுள்ளது. சினிமா ஸ்டிரைக்கால் முன்பே ஆரம்பிக்க இருந்த ஷூட்டிங் நிறுத்தப்பட்டது.

ஏற்கனவே ஷெட் போடப்பட்டு தயார் நிலையில் இருந்தபோதும் அஜித்தின் வேண்டுகோளுக்கினங்க படக்குழுவும் படப்பிடிப்பை அதனை தள்ளிவைத்து விட்டது.

ஆனால் ரசிகர்கள் மத்தியில் சிறு வருத்தம் தான். அஜித்தின் பிறந்தநாளுக்காவது ஏதாவது விசுவாசம் ஸ்பெஷலாக ஏதாவது ரிலீஸ் செய்வார்களா என பார்க்கலாம்.

இயக்குனர் சிவாவுக்கு இது அஜித்துடன் நான்காவது படம். சிவாவுக்கு ஒரு சிறப்பான நண்பர் இருக்கிறாராம். அவரின் பெயர் ராஜ சேகர். துப்பாக்கி சுடுதலில் ஆர்வம் அதிகமுள்ளவராம்.

தங்கம், வெள்ளி, வெண்கலம் என பல பதக்கங்களை வாங்கி குவித்திருக்கிறார் அவர். ஆனால் இவரின் முழுநேர தொழில் வழக்கறிஞராம். 20 வருட அனுபவங்கள் கொண்டவர்.

சிறுவயதிலே இவர் சிவா, சூர்யா என சினிமாவில் நல்ல நட்பு வட்டாரத்திலேயே தான் இருந்திருக்கிறார். இந்த சிறப்பான ஒருவர் வேறு யாருமில்லை.

சூர்யாவின் 2D படத்தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரி ராஜ சேகர் தானாம்.