Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சின்மயி-வைரமுத்து விவகாரம் A To Z, நடந்தது என்ன, எது உண்மை? முழு விவரம் இதோ

உலகம் முழுவதும் பெண்கள் வேலைப்பார்க்கும் இடங்களில் பாலியல் தொல்லை என்பது நடந்துக்கொண்டே தான் வருகின்றது. ஒரு சிலர் தைரியமாக குரல் கொடுப்பார்கள், ஒரு சிலர் குடும்ப நிலை புரிந்து அதை தாங்கி கொண்டு வேலைப்பார்ப்பார்கள்.

ஆனால், அதை தங்களுக்கு சாதகமாக்கி கொண்டு சில கொடூரன்கள் இப்படி தொடர்ந்து தொல்லைகளை கொடுத்துக்கொண்டே இருப்பார்கள், அதிலும் சினிமா என்று வந்துவிட்டால் வெட்ட வெளிச்சம் தான்.

அப்படி ஹாலிவுட்டில் Me too என்ற ஒரு டாக் ட்ரெண்ட் ஆகி பல பெண்கள் குறிப்பாக சினிமாவில் இருக்கும் பெண்கள் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை வெளிப்படையாக பேச ஆரம்பித்தனர்.

அது பாலிவுட் வந்து தனுஸ்ரீயின் ஆரம்பித்து தற்போது கோலிவுட்டியில் சின்மயிடம் வந்து நிற்கின்றது, ஆனால், சின்மயி தூக்கி போட்டது பலரின் தலையில் இடி தான், ஆம், பல தேசிய விருதுகளையும், பத்ம விருதுகளையும் வாங்கிய வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியுள்ளார்.

இவை உண்மையென்றால் கண்டிப்பாக வைரமுத்து தண்டிப்பட வேண்டியவர் தான், அதற்கு முன்பு சில விஷயங்களை பார்ப்போம், சின்மயி இந்த பிரச்சனை 2005-லேயே நடந்ததாக கூறியுள்ளார்.

2005-ல் தான் ஸ்வீஸ் நாட்டிற்கு ஒரு நிகழ்ச்சிக்கு செல்லும் போது அங்கு வைரமுத்து தன்னை படுக்கைக்கு அழைத்ததாகவும், வரவில்லை என்றால் உன் திரைப்பயணமே இருக்காது என்று மிரட்டியதாகவும் கூறியுள்ளார். உடனே அப்படிப்பட்ட வேலையே வேண்டாம் என்று சின்மயி வந்ததாக தெரிவித்துள்ளார்.

அதை தொடர்ந்து 14 வருடம் கழித்து தற்போது வைரமுத்து குறித்து பல பெண்கள் இந்த me too டாக்கில் சொல்ல, சின்மயி உடனே தனக்கு நேரந்ததையும் கூறியுள்ளார்.

ஆனால், மக்களுக்கு சந்தேகம் வருவதே இங்கு தான், எந்த ஒரு பெண்ணும் இந்த விஷயத்தில் பொய் சொல்ல மாட்டார், அதிலும் சின்மயி போல் நன்கு பெரிய இடத்தில் இருப்பவர் இதில் எந்த விளம்பரமும் தேட ஒன்றுமில்லை, அதுவுமில்லாமல், 96 படத்திற்கு த்ரிஷா டப்பிங் கொடுத்த ஒரே காரணத்திற்காக சின்மயியை தலையில் தூக்கி ரசிகர்கள் கொண்டாடி வரும் தருணம்.

அந்த நேரத்தில் எல்லோருக்காகவும் சின்மயி குரல் கொடுத்து வருவது பாராட்ட வேண்டிய விஷயம், மேலும், சின்மயி இதை அன்றே சொல்லியிருந்தால் இன்று பல பெண்கள் இப்படி ஒரு கஷ்டத்தை அடைந்திருக்க மாட்டார்கள் அல்லவா? என்று கூட மக்கள் கேட்டு வருகின்றனர்.

அதோட வைரமுத்துவிற்கு அரசியல் பலம் இருந்ததாக கூறுகின்றார் சின்மயி, வைரமுத்து தீவிர திமுக-வை சார்ந்தவர் என்பது உலகம் அறிந்ததே, அதிமுக-ஆட்சி தான் கடந்த சில வருடங்களாக நடந்து வருகின்றது, அப்போது கூட இதை சொல்லியிருக்கலாமே! என்றும் கேட்டு வருகின்றனர்.

மேலும், இப்படி தவறாக தன்னிடம் ஒருவன் நடந்துக்கொள்கின்றான் என்றால் எந்த ஒரு பெண்ணும் அந்த இடத்திலிருந்து விலகி வர முயற்சிப்பாள், அவனை ஒருபோதும் மனிதனாக பார்க்கும் எண்ணம் வராது.

ஆனால், சின்மயி தொடர்ந்து தன் டுவிட்டரின் வைரமுத்துவிற்கு புகழ் புராணம் தான் பாடியுள்ளார், அது போதாது என்று அவரை திருமணத்திற்கு அழைத்து அவருடைய காலிலேயே விழுந்து கும்பிடுகின்றார்.

இதையெல்லாம் பார்க்கும் போது தான் மக்கள் அதிருப்தியும் ஆகியுள்ளனர், எது எப்படியோ, இன்று ஒரு விஷயம் பொது தளத்திற்கு வந்துவிட்டது, அதற்கு வைரமுத்து அளித்த பதிலும் ஏற்புடையதே இல்லை.

அவர் மீது தெளிவாக நேராக வைக்கப்படும் குற்றச்சாட்டிற்கு காலம் தான் பதில் சொல்லும் என்று சமாளிப்பது போல் உள்ளது, கண்டிப்பாக அவர் இதற்கு முழு விளக்கம் தரவேண்டும், அதே நேரம் சின்மயி இதை இங்கேயே பேசாமல் இதை போலிஸில் புகாராகவும் கொடுக்கவேண்டும் என்பதே மக்களின் விருப்பம்.