Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தர்பார் வசூல் வேண்டுமென்றே குறைத்து சொல்லப்படுகின்றதா? பின்னால் இருப்பவர்கள் யார்?

தர்பார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம். இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது.

அவர்கள் எதிர்ப்பார்த்தது போலவே ரசிகர்களை தர்பார் படம் மிகவும் கவர்ந்து இழுத்துள்ளது, தற்போது வரை திரையரங்குகளுக்கு மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து செல்கின்றனர்.

அப்படியிருக்க தமிழகம் தாண்டி மற்ற அனைத்து இடங்களிலும் தர்பார் படத்தின் வசூல் துல்லியமாக கூறிவிட்டனர்.

அதிலும் ஆந்திரா, கர்நாடகா போன்ற இடங்களில் மட்டும் தர்பார் ரூ 30 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.

அப்படியிருக்க தமிழகத்தில் தர்பார் 7 நாட்கள் முடிவில் வெறும் ரூ 54 கோடி தான் வசூல் என்று ஒரு தகவல் இணையத்தில் உலா வருகின்றது.

இதற்கு பல ரஜினி ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர், அதோடு, சென்னையில் மட்டும் ரூ 10 கோடியை எட்டியுள்ள தர்பார் மத்த அனைத்து இடங்களிலும் சேர்த்து ரூ 44 கோடி தான் வந்ததா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும், தர்பார் சிட்டியில் மட்டும் தான் ஓடுகிறதா என்றால், திருச்சி, புதுக்கோட்டை, திருநெல்வேலி, நாகர்கோவில் வரை இப்படம் முதல் 4 நாட்கள் நல்ல கூட்டம் தான்.

திங்கள், செவ்வாய் கொஞ்சம் கூட்டம் குறைவு தான் என்றாலும், பொங்கல் நாளான நேற்று முதல் நாளுக்கு இணையான கூட்டம் வந்து தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் ஹவுஸ்புல் காட்சிகள்.

எப்படியும் நேற்று மட்டுமே ரூ 10 கோடி வசூலை தர்பார் எட்டியிருக்க வேண்டும் என்பது தான் எல்லோரின் எதிர்ப்பார்ப்பும், ஆனால், இவர்கள் சொன்ன கணக்குப்படி பார்த்தால் 8 கோடி கூட வரவில்லை என்பது போல் கூறி வருகின்றனர்.

இப்படி தொடர்ந்து ரஜினி படங்களுக்கு வசூலில் குறிப்பாக தமிழகத்தில் முரண்பாடான கருத்துக்கள் இருப்பது பலருக்கும், இதற்கு பின்னால் யாரும் இயங்குகிறார்களா? என்ற சந்தேகம் உள்ளது.

ஏனெனில் ரஜினி அரசியலுக்கு வருகிறேன் என்ற சொன்ன பிறகு தான் தொடர்ந்து இப்படி வசூல் சர்ச்சை இருந்து வருகின்றது.

தயாரிப்பாளர் தரப்பே அதிகாரப்பூர்வமாக ரூ 150 கோடி 4 நாட்களில் என்று சொன்னால், ஒரு சில பாக்ஸ் ஆபிஸ் தளங்கள் அதுவும், ஆந்திராவை சேர்ந்த தளங்கள் இன்னும் வசூலை குறைத்து தான் கூறி வருகின்றனர்.

எது எப்படியோ தர்பார் பல திரையரங்க உரிமையாளர்களே முன்வந்து மெகா ஹிட், நல்ல வசூல் என்று கூறி வருகின்றனர், அப்படியிருக்க தயாரிப்பு தரப்பே தமிழகத்தின் வசூலை வெளியிட்டால் தான் உண்மை தெரிய வரும்.