Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

20 ஆண்டு பகையை மறந்து மீண்டும் இணையும் ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென்

பிரபல பாலிவுட் நடிகைகள் மாதுரி தீட்சித்தும், ஜூஹி சாவ்லாவும் 22 ஆண்டு பகையை மறந்து சமிபத்தில் ரிலீஸான குலாபி கேங் படத்தில் நடித்தனர்.
அதேபோல் 20 ஆண்டு பகையை மறந்து ஐஸ்வர்யா ராயும், சுஷ்மிதா சென்னும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளனர்.

கடந்த 1994ம் ஆண்டு நடந்த இந்திய அழகிப் போட்டியில் ஐஸ்வர்யா ராய் வெற்றி பெறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தபோது சுஷ்மிதா சென் பட்டத்தை தட்டிச் சென்றார். அப்போது ஆரம்பித்தது அவர்களுக்குள் மோதல்

இதுஒருபுறமிக்க அழகி பட்டம் வென்ற பிறகு ஐஸ்வர்யாவும், சுஷ்மிதாவும் சினிமாவில் நுழைந்தார்கள். ஐஸ்வர்யா பெரிய நடிகை ஆனார். ஆனால் சுஷ்மிதாவால் ஐஸ் அளவுக்கு ஜொலிக்க முடியவில்லை.

இதெல்லாம் மிக பெரிய கோபமாக உருவவெடுத்து படையப்பா நீலாம்பரி ரேஞ்சுக்கு சென்றார் சுஷ்மிதா.

திருமண பொறுப்புகள் வந்து பிறகு நடிக்காமல் இருந்த ஐஸ்வர்யா பிரபல இயக்குனர் பிரஹலாத் காக்கட்டின் ஹேப்பி ஆனிவர்சரி படம் மூலம் பாலிவுட்டில் மறுபிரவேசம் செய்ய உள்ளார்.

ஆமாங்க ஹேப்பி ஆனிவர்சரி படத்தில் ஐஸ்வர்யாவுடன் நடிக்குமாறு பிரஹலாத் சுஷ்மிதா சென்னிடம் கேட்டுள்ளார். அவரது கதாபாத்திரம் பிடித்துப் போகவே சுஷ்மிதா சென்னும் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். ஆக 20 ஆண்டு பகையை மறந்து இருவரும் நடிக்கவிருக்கிறார்கள்.