Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மீண்டும் தனுஷுடன் இணையும் பசுபதி

பொல்லாதவன், ஆடுகளம் திரைப்படத்தை அடுத்து தனுஷ் நடிப்பில் மூன்றாவதாக வெற்றிமாறன் ஒரு படம் உருவாகி வருகிறார்.

இப்படத்தின் படபிடிப்பு ஈஸியாரில் ஆரம்பித்ததில் இருந்தே படத்தை பற்றிய ஆர்வமும் ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் சுள்ளான் திரைப்படத்தில் தனுஷுக்கு வில்லனாக நடித்த பசுபதி இப்படத்திலும் தனுஷுடன் நடிக்க இருக்கிறாராம்.

அதிகாரப்பூர்வமாக இன்னும் பெயர் கூட அறிவிக்கப்படாத இத்திரைப்படத்தை தனுஷ் தயாரிக்க வெற்றிமாறன் இயக்குகிறார்.

மேலும் தற்போது வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் பிஸியாக இருக்கும் தனுஷ் விரைவில் ஹிந்தியில் பால்கி இயக்கத்தில் நடிக்க உள்ளாராம்.

இதையடுத்து பாலாஜி மோகன் இயக்கத்திலும் நடிக்க போகிறார் தனுஷ் என சலசலக்க ஆரம்பித்திருக்கிறது நமது தமிழ் சினிமா வட்டாரம்.