Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஹீரோவாக அவதாரம் எடுக்கும் டான்ஸ் மாஸ்டர்

ஒளிப்பதிவாளர்கள், இயக்குனர்கள் ஆவதும், நடன இயக்குனர்கள் ஹீரோவாவதும், இசையமைப்பாளர்கள் ஹீரோவாவதும் புதிய விஷயம் இல்லை.

அந்த வகையில் தற்போது தான் நடனம் அமைக்கும் பாடல்கள் அனைத்திலும் தலைகாட்டி விடும் நடன இயக்குனர் ஸ்ரீதர் அவர்கள் ஒரு புதிய படத்தில் நடித்துக் கொண்டு வருகிறாராம்.

போலி என்ற படத்தில் ஒரு தகவலும் இல்லாமல் சைலன்ட்டாக நடித்து வருகிறார்.

இந்த படத்தை புதுமுக இயக்குனர் மாதேஷ் இயக்க, ஸ்ரீதருக்கு ஜோடியாக புதுமுக நாயகி ஸ்பூர்த்தி நடித்து வருகிறார்.

படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்துவிட்ட நிலையில் விரைவில் படத்தை பற்றிய அறிவிப்புகள் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ம்…..ம்……கலக்குங்க சார்