Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கார்த்திகாவுக்கும் பிரியாணி கொடுத்த ஆர்யா

ஆர்யா எதை மறக்கிறாரோ இல்லையோ, தன்னுடன் நடிக்கும் கதாநாயகிகளுக்கு பிரியாணி கொடுப்பதை மட்டும் மறக்காமல் செய்து கொண்டு வருகிறார்.

இப்படி ஒரு பாலிஸி வைத்திருக்கும் ஆர்யா இதுவரை தன்னுடன் நடித்துள்ள நயன்தாரா, அனுஷ்கா, டாப்சி, ஹன்சிகா, அஞ்சலி, அமலாபால் என பல நடிகைகளுக்கு பிரியாணி கொடுத்திருக்கிறார்.

அந்த பட்டியலில் இப்போது புறம்போக்கு படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் கார்த்திகாவும் இணைந்துள்ளார்.

கார்த்திகா இந்த பிரியாணி பட்டியலில் வரக் கூடாது என்று ஆர்யாவுக்கு பல நாள் டிமிக்கி கொடுத்து வந்தார். ஆனால் ஆர்யா விடுவாரா, ஒரு மாதிரியாக கார்த்திகாவிடம் பேசி சம்மதிக்க வைத்துவிட்டார் ஆர்யா.

ஆர்யா அவரை தனது பிரியாணி கடைக்கு அழைத்து சென்று மணக்க மணக்க விருந்து கொடுத்திருக்கிறார்.

கார்த்திகாவுக்கு பிரியாணி விருந்து கொடுத்து அசத்தியது பத்தாது என்று கார்த்திகாவின் தாய்குலம் ராதாவிற்கும் பிரியாணி பார்சல் அனுப்பினாராம் ஆர்யா.