Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாமனாரின் ஜோடி விரைவில் மருமகனுக்கும் ஜோடியாம்

கோச்சடையான் படத்திற்கு பிறகு தற்போது ரஜினி நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படம் லிங்கா.

இதில் இரட்டை வேடத்தில் நடிக்கும் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹாவும், அனுஷ்காவும் நடிக்கின்றனர்.

மேலும் இப்படத்தின் படபிடிப்பு முடிவடையாத நிலையில் சோனாக்ஷி சின்ஹாவை தனுஷோடு ஜோடி சேர்க்க நினைக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன்.

தனுஷை வைத்து பொல்லாதவன், ஆடுகளம் திரைப்படத்தை இயக்கியவர் வெற்றிமாறன். இவர் தனுஷை வைத்து மூன்றாவதாக ஒரு படம் எடுத்து வருகிறார்.

இதற்கு முன் வெற்றிமாறன் தனுஷை வைத்து எடுத்த இரண்டு படங்களை விட இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் முழுமூச்சாய் இருக்கும் வெற்றிமாறன் இப்படத்தில் எப்படியாவது சோனாக்ஷியை நடிக்க வைத்து விட வேண்டும் என்று அவருக்கு கதை எல்லாம் கூறியிருக்கிறார்.

கதை கேட்ட சின்ஹா விரைவில் ஒரு நல்ல முடிவை கூறுகிறேன் என்று சொல்லிவிட்டாராம்.

(ஏம்மா உன்கிட்ட கதை தான சொன்னேன் ஒன்னு பிடிச்சிருக்குனு சொல்லு.. இல்ல பிடிக்கலனு சொல்லு.. அத விட்டுட்டு என்னாதிது சின்ன புல தனம்மா அப்றம் சொல்றேன் சொல்ற நா உன்கிட்ட என்ன லவ்வா சொன்னேன்)