Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்சேதுபதியை கைவிட்ட டோலிவுட்

தென்மேற்குப் பருவக்காற்று படத்தின் முலமாக அறிமுகமான விஜய்சேதுபதிக்கு முதல் படம் தோல்வியடைந்தாலும் அடுத்தடுத்து நடித்த படங்கள் மார்கெட்டை ஏற்றிவிட்டது.

விஜய்சேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பீட்சா, சூதுகவ்வும், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்கள் அதிக வரவேற்பை பெற்றதால்,

அப்படங்களின் தெலுங்கு உரிமையை வாங்க பல நிறுவனங்கள் போட்டி போட்டு லைனில் நின்றிருக்கின்றனர்.

பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ஆகிய படங்கள் தெலுங்கில் அதிக பட்ஜட்டில் ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

கொஞ்ச காலகட்டத்தில் கோலிவுட்டில் மட மடவென ஏறிய விஜய்சேதுபதி தெலுங்கிலும் எப்படியாவது தனக்கென ஒரு இமேஜை உருவாக்க நினைத்திருந்தார்.

ஆனால் டோலிவுட்டோ அவருக்கு ஏமாற்றத்தையே அளித்திருந்தது, வெளிவந்த அத்தனை படங்களுமே தோல்வியடைந்து தற்போது டோலிவுட்டில் விஜய்சேதுபதி படங்களை வாங்க ஆளில்லையாம்.

டோன்ட் வோரி சார்!!!!! டோலிவுட் கைவிட்டாலும் நமக்கு இருக்கு கோலிவுட்