Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தொலைக்காட்சி பத்திரிக்கையாளராக மாறும் ஆஷா

த்ரிஷ்யம் திரைப்படத்தில் நடித்த ஆஷா சரத் தற்போது கன்னடத்தில் ரீமேக் செய்து வரும் த்ரிஷ்யம் திரைப்படத்தில் அவரது படபிடிப்பை முடித்து விட்டார்.

இதை பற்றி கூறிய ஆஷா, மலையாளத்தில் நடித்ததை விட கன்னடத்தில் அவரது கதாபாத்திரம் மிகவும் கடினமாக இருந்ததாக கூறினார்.

இதையடுத்து ஏஞ்சில்ஸ் திரைப்படத்தில் நடிக்கவுள்ள ஆஷா, அப்படத்தில் ஊடகத்தில் பணியாற்றும் ஒரு தொலைக்காட்சி பத்திரிக்கையாளர் பெண்ணாக நடிக்கவுள்ளதாக கூறிய அவர்,

இந்திரஜித் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இத்திரைப்படத்தில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்றும் தெரிவித்துள்ளாராம்.