Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சமந்தாவா - அலரும் மல்லுவுட் நாயகிகள்

கோலிவுட், டோலிவுட் என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வரும் சமந்தா தற்போது மல்லுவுட் ஹீரோக்களுடன் ஜோடி சேர ஆசைபடுகிறார்.

சமீபத்தில் சமந்தா என் அம்மா ஆலப்புழையில் பிறந்தவர், எனவே மலையாள படத்திலும் நடிக்க ஆசைப்படுகிறேன் என்று மல்லுவுட் ஹீரோயின்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் சமந்தா.

இந்த செய்தி மல்லுவுட் நாயகிகள் காதில் விழ, அவ்வளவு தான் இனி நமக்கு பட வாய்ப்புகள் வராது என்று சோகத்தில் மூழ்கியுள்ளனர் மல்லுவுட் நாயகிகள்.

காவ்யா மாதவன், ரீமா கல்லிங்கல், மஞ்சு வாரியர், அனன்யா என நிறைய நடிகைகள் மல்லுவுட்டில் இருந்தாலும் இவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது.

இளம் நடிகைகளும் சிலர் வந்தாலும் உடனே தமிழில் வாய்ப்பு கிடைத்தால் ஜம்ப் ஆகிவிடுகின்றனர்.

இதனால் புதுமுக நாயகிகளுக்கு மல்லுவுட்டில் டிமான்ட் அதிகரித்துள்ளது.

எனவே சமந்தா வந்தால் வரும் பட வாய்ப்புகள் கூட போய்விடுமே என்று கதறுகின்றனராம் மல்லுவுட் நாயகிகள்.