ஒரே வருட காலத்தில் மலையாள திரையுலகில் முன்னணி இடம் பிடித்தவர் என்றால், அனைவரின் ஞாபகத்திலும் வருவது மியா ஜார்ஜின் முகம் தான்.
ரெட் ஒய்ன்ஸ், விஷூதன், மேம்மோரிஸ் போன்று மலையாளத்தில் மியா நடித்த அனைத்து படங்களுமே பிளாக் பஸ்டர்.
மலையாளத்தில் அதிக பங்கு வகித்த மியா தற்போது தமிழிலும் களமிறங்கிவிட்டார்.
தமிழில் நான் திரைப்படத்தை இயக்கிய ஜீவா சங்கர் இயக்கும் அமரகாவியம் திரைப்படத்தில், தமிழ் திரையுலக முன்னணி ஹீரோ ஆர்யாவின் தம்பி சத்யாவோடு ஜோடியாக நடித்துள்ளார் மியா.
ஆர்யா தயாரிப்பில் வெளிவர இருக்கும் இப்படம் ஒரு உண்மை சம்பவகதையை வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இரண்டு வாரங்களில் திரைக்கு வர இருக்க இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஜிப்ரான்.



