Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மீனாவின் தந்தை திடீர் மரணம்!!

தென்னிந்திய சினிமா துறையில் பிரபல நடிகையான மீனாவின் தந்தை துரைராஜ் நேற்று மாரடைப்பால் திடீரென காலமானார்.

67 வயதான அவருக்கு நேற்று இரவு திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து, அவரை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

ஆனால், வழியிலேயே அவர் மரணம் அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். அவரது உடல் சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீ நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரின் இறுதி சடங்கு இன்று நடக்கவுள்ளது.

வீரா, முத்து, அவ்வை சண்முகி, எஜமான் போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்த மீனா, சமீபத்தில் மலையாளத்தில் நடித்து வெளிவந்த 'திரிஷ்யம்' படமும் மெகா ஹிட் ஆனது.

இப்போது அவர் அதன் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார். சினி உலகம் மீனா குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறது.