Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஷயம் தெரிந்தும் திருமணத்திற்கு ஓகே சொன்ன டிடி

பிரபல நட்சத்திர சேனலில் நீண்ட காலமாக தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தவர் திவ்யதர்ஷினி என்கிற டிடி.இவருக்கோ ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.

சமீபத்தில் இவரை பற்றிய சில கிசு கிசுக்கள் வெளிவர தொடங்கியுள்ளன. எல்லாருக்கும் பர்ஸ்ட் லவ் இருக்க தானே செய்யும், நம்ம டிடி மட்டும் அதில் விதிவிலக்கா என்ன? என்ன ஷாக் ஆகிட்டீங்களா? ஆமாங்க நம்ம டிடியும், ஒரு இளைஞரை டீப்பா லவ் பண்ணாங்களாம்.

திரையுலகமே இவங்க ரெண்டு பேரும் எப்ப திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்ப்பார்த்த நிலையில், வழக்கமாக எல்லா சினிமாகாரர்களுக்கும் லவ் பிரேக்அப் ஆவது போல் இவருக்கு லவ் பிரேக் அப் ஆயிடுச்சாம்.

அதன் பிறகு அந்த காதலை மறக்க ரொம்பவும் சிரம பட்டார் டிடி. அடடா இதெல்லாம் பழைய கதை. இப்ப லேட்டஸ்ட் நியூஸ்க்கு வருவோம்…..தன்னுடைய எல்லா படத்திலும் காதலர்களை பிரித்து காட்டும் வழக்கத்தை வைத்திருக்கும் கௌதம் மேனனின் விசுவாசமான உதவியாளர் ஒருவருடன் நம்ம டிடிக்கு காதல் மலர்ந்துள்ளது.

உடனே டிடியும் அதை மீடியாவுக்கு அறிவித்து விட்டார். ஆனால் டிடி தன் காதலை பற்றி அறிவித்ததும் அவருக்கு பெரிய தலைவலி ஏற்பட்டு விட்டதாம். டிடி காதலித்து மணக்க இருக்கும் ஸ்ரீகாந்த் டிடியை விட பல வயது இளையவராம். எனக்கு 30, உனக்கு 25 என்ற கதை. இந்த நியூஸ் தான் இப்ப சின்னத்திரையில் ஹாட் எஸ்.எம்.எஸ்.