Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பெண்களுக்கு ஆதரவாக களமிறங்கிய மஞ்சு வாரியர்

How Old Are You படத்தின் மூலம் சினிமாவில் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி வெற்றிநடை போட்டு வருபவர் மஞ்சு வாரியர்.

இவர் தான் நடிக்கும் புதிய படத்தின் புரொமோஷனுக்காக நடிகர் சுராஜ்வெஞ்சரமூட் உடன் தான் இருக்கும் புகைப்படத்தை முகப்புத்தகத்தில் பகிர்ந்திருக்கிறார்.

அந்த புகைப்படம் கீழ் ஒருவர் ஆபாசமாக கமென்ட் செய்துள்ளார். இதனை பார்த்த மஞ்சு வாரியர் டி.ஜி.பி. செய் குமாரிடம் புகார் கொடுத்துள்ளார்.

அந்த நபர், கொச்சியில் பயிற்சி போலீஸ் அதிகாரியாக பணிபுரியும் ரெஜூ மோன் என்பது தெரிய வந்ததையடுத்து, அவர் உடனடியாக சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளதாகச் கூறப்படுகிறது.

இதுகுறித்து மஞ்சு வாரியர், “பொறுப்புள்ள எந்த அதிகாரியும் இது போன்ற செயலில் ஈடுபட மாட்டார்கள். இந்த நடவடிக்கையைப் பழி வாங்கும் விதமாகப் பார்க்காமல், பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி படுத்தும் ஒரு நடவடிக்கையாக மட்டுமே பார்க்க வேண்டும்” என்றும் சொல்லியிருக்கிறார்.

இந்த செயலால் மஞ்சு வாரியரை பலர் பாராட்டி வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் விருப்பத்தை நிறைவேற்றிய விக்ரம்