Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தலைப்பை மாற்ற சொன்ன முருகதாஸ்

இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் முருகதாஸ். இவர் அடுத்து மகேஷ் பாபுவுடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றவுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இன்று விஜய் ஆண்டனி நடிப்பில் சசி இயக்கத்தில் உருவாகியுள்ள பிச்சைக்காரன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டார்.

இதில் பேசிய இவர் ‘முதலில் இந்த படத்தின் தலைப்பை கேட்டவுடன், அதிர்ச்சியடைந்தேன். சசியை நேரில் பார்த்து இந்த தலைப்பை மாற்றச்சொன்னேன்.

அவரும் மாற்றுகிறேன் என கூறினார், ஆனால், தலைப்பை மாற்றவே இல்லை. இன்று ட்ரைலரை பார்க்கும் போது தான் தெரிகின்றது. இந்த தலைப்பு படத்திற்கு எவ்வளவு பொருத்தம் என்பது’ என பேசினார்.

அச்சம் என்பது மடமையடா படத்தின் தள்ளிப்போகாதே பாடலை கேட்க