Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பஞ்சு அருணாச்சலம் அவர்களின் இறுதி சடங்கை முடிப்பதில் சிக்கலா?

முரட்டு காளை, சகலகலா வல்லவன், அபூர்வ சகோதரர்கள் போன்ற வெற்றி படங்களுக்கு கதை எழுதியவரும், பிரபல தயாரிப்பாளரும், இயக்குனருமான பஞ்சு அருணாச்சலத்தின் மறைவு தமிழ் சினிமா பிரபலங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அவரது உடல் சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது வீட்டில் இன்று மாலை ஆறு மணி வரை பிரபலங்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருக்கும்.

பஞ்சு அருணாச்சலத்தின் மகன் தற்போது அமெரிக்காவில் இருப்பதால், அவர் வரும் வரை, உடலை மருத்துவமனையில் வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதனால் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு பின்னர் தான் இறுதி சடங்குகள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தகவலை இயக்குனர் வெங்கட் பிரபு செய்தியாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.