Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போன இசையமைப்பாளரை மீண்டும் கூட்டி வந்த சுசிகணேசன்

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக திகழ்ந்தவர் வித்யாசாகர். இவர் ரஜினி முதல் அனைத்து முன்னணி நட்சத்திரங்களின் படத்துக்கும் இசைமைத்தவர். இந்நிலையில் 7, 8 வருடங்களாக தமிழ் சினிமாவில் இருந்து இவர் விலகியே இருந்தார். மட்டுமின்றி பல இளம் இசையமைப்பாளர்களின் ஆதிக்கம் அதிகம் ஆனதும் ஒரு காரணம் என்று சொல்லலாம்.

இந்நிலையில் இயக்குனர் சுசி கணேசன் பாபி சிம்ஹா, அமலா பால், பிரசன்னா உட்பட முன்னணி நடிகர்களை வைத்து திருட்டு பயலே பக்கம் 2 எடுத்து வருகிறார் திருட்டுப் பயலே’ முதல் பாகத்திற்கு பரத்வாஜ் இசை அமைத்திருந்தார். ஆனால் இப்போது இரண்டாம் பாகமாக உருவாகும் ‘திருட்டுப் பயலே’வுக்கு இசை அமைக்கும் பொறுப்பினை வித்யா சாகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மெலடி கலந்த ஐந்து பாடல்கள் இப்படத்தில் இடம் பெறுகிறதாம். அதனால் இந்த படத்திற்கு வித்யாசாகர் மிகவும் பொருத்தமான இசை அமைப்பாளராக இருப்பார் என்பதால் அவரை ஒப்பந்தம் செய்துள்ளதாக படத்தின் இயக்குனர் சுசி கணேசன் கூறியுள்ளார்.