Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சைத்தான் இயக்குனரோடு சேர்ந்த வரலட்சுமி! வேட்டை ஆரம்பம்

விஷாலின் காதலி என அடிக்கடி பேசப்படும் நடிகை வரலட்சுமி சரத்குமார். இயக்குனர் பாலாவின் தாரை தப்பட்டை படத்தின் மூலம் எல்லோரின் பார்வையையும் தன் பக்கம் திருப்பியவர்.

அந்த படத்தில் இவரின் நடிப்பு பலரின் வாழ்த்துக்களை பெற்று தந்தது. தற்போது இவர் சைத்தான் படத்தின் இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தியின் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.

தெலுங்கில் சூப்பர்ஹிட் ஆன ஷணம் என்ற படத்தின் ரீமேக் தான் இது. படத்தில் வரலக்ஷ்மி போலீஸ் வேடத்தில் நடிக்கவுள்ளார். இதில் சிபிராஜ், ரம்யா நம்பீசன் ஆகியோருக்கு முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.

விரைவில் படப்பிடிப்பு தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

loading...