Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தனுஷ் யாருடைய மகன்? கோபமான பதில்

தனுஷ் இன்று தமிழ் சினிமாவை தாண்டி இந்தியளவில் கொடி கட்டி பறக்கின்றார். இந்நிலையில் தனுஷ் எங்களுடைய மகன் என்று சிவகங்கையை சார்ந்த ஒரு தம்பதியினர் பல வருடங்களுக்கு முன் போலிஸில் புகார் கொடுத்தனர்.

இதை தொடர்ந்து விரைவில் தனுஷ் மதுரை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட, இதுக்குறித்து தனுஷின் தந்தை கஸ்துரிராஜா மனம் திறந்துள்ளார்.

இதில் இவர் ‘இந்த செய்தியை படிக்கும் போது எனக்கு மன வருத்தமாக உள்ளது, என்னை சினிமாவில் இருப்பவர்களுக்கு 40 வருடமாக தெரியும்.

தனுஷின் நண்பர்கள் இங்கு தான் இருக்கிறார்கள், நாட்டில் எத்தனையோ பிரச்சனை இருக்கும் போது, இதற்கெல்லாம் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பது கஷ்டமாக உள்ளது’ என கூறியுள்ளார்.