தனுஷ் இன்று சினிமாவில் வளர்ந்து விட்ட நடிகர். சாதனை தேடி பல விதமாய் பயணித்து வருகிறார். இந்நிலையில் தற்போது அவரை தன் மகன் என் சிவகங்கையை சேர்ந்த தம்பதி சொந்தம் கொண்டாடி வருகின்றனர்.
நீதிமன்றம் வரை சென்ற வழக்கு எப்போது தீர்ப்பு வரும் என குடும்பத்தினர், ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். சமீபத்தில் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய கஸ்தூரி ராஜா சினிமா இன்று பல கோணங்களில் பயணம் செய்கிறது.
கலைஞன் என்றால் காதல் இருக்க வேண்டும். முதன் முதலில் நான் ராஜ் கிரானை வைத்து என் ராசாவின் மனசிலே என படம் எடுத்த போது பலரும் எங்கள் இருவரை விமர்சித்தார்கள்.
படம் வெற்றியான பிறகு ஆச்சர்யமாய் பார்த்தார்கள். தற்போது தான் சுதந்திரம் இல்லாமலும், மகிழ்ச்சி இல்லாமலும் இருக்கிறேன்.
தனுஷை என் மகன் என வேறொருவர் உரிமை கொண்டாடுகிறார்கள். 11 வகுப்பு படிக்கும் போது துள்ளவதோ இளமை படத்தில் நடிக்க அவனுக்கு விருப்பமில்லை.
தயாரிப்பாளர் அப்பாவும் பிள்ளையும் சேர்ந்து தான் படம் பண்ண வேண்டும் என பெரிய மனதோடு சொன்னதால் அந்த படம் உருவானது என கூறினார்.