ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவளித்து வருபவர் ஜி.வி.பிரகாஷ். நேரில் சென்று களத்தில் இறங்கியவர் அவ்வப்போது சமூக வலைதளங்களிலும் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.
அவர் தற்போது அமைதி வழியில் சென்ற உங்களது போராட்டம் இன்று அரசையே பணியவைத்து அவசர சட்டத்தை இயற்றவைத்துள்ளது.
எத்தனையோ தீர்க்கப்படாத பிரச்சனைகள் இன்னும் இருக்கிறது. அவற்றையும் நீங்கள் முன்னெடுத்து செல்ல வேண்டும்.
தமிழ்நாடு மக்களின் நம்பிக்கை நீங்களே என கூறியவர் காவல் துறை மாணவர்களை, பொதுமக்களை அடித்த செய்தி கேட்டு காவலர்களுக்கு பயிற்சியின் பொது கல் எறியவும் கற்று தருகிறார்களா?
தானே தலைவனாய் நின்று போராடும் ஒவ்வொருவரையும் அரசு இப்படித்தான் நடத்துவதா என கேள்வி எழுப்பியுள்ளார்.