இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடைபெறுவது வழக்கம். இம்முறை தயாரிப்பாளர் சங்க தேர்தல் பலரது கவனத்தை ஈர்க்கும் என்று விஷாலின் அறிவிப்பால் எதிர்பார்க்கபட்டது.
தற்போது உள்ள தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் சரியில்லை என்று நடிகர்களின் சார்பில் சிலர் களம் இறங்குவார்கள் என்று பேசப்பட்டது. அதன்படி பிப்ரவரி 5ம் தேதி நடக்க இருந்த தேர்தல் தற்போது மார்ச் மாதம் 5ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
ஏன் தள்ளிவைத்தார்கள் என்று வெளிப்படையாக தெரிவிக்காவிட்டாலும் தற்போது தமிழகத்தில் நிலவி வரும் சூழ்நிலை காரணமாக தான் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்று சில தயாரிப்பாளர்கள் கூறினர்.