Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ராஜாவிற்கு பதிலடி தந்த ஹிப்ஹாப் ஆதி

ஜல்லிக்கட்டு பிரச்சனை குறித்து முதன் முதலாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியது ஹிப்ஹாப் ஆதி தான். அவர் தான் முதன் முதலாக நமக்கு வெற்றி கிடைத்துவிட்டது கலைந்து செல்லுங்கள் என்று கூறினார்.

இதை தொடர்ந்து பலரும் நிலைமையை புரிந்துக்கொள்ளாமல் ஆதியை திட்ட ஆரம்பித்தார்கள், அவர் விலை போய்விட்டார் என்று கூட கூறி அவர் மனதை புண்படுத்தினார்கள்.

பிறகு பிரபல அரசியல் பிரமுகர் ராஜா ’ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தமிழ் பிரிவினைவாதிகள், முஸ்லீம் அடிப்படைவாதிகள், தேச விரோதிகள் புகுந்து விட்டனர் என்பதை ஆதி தெளிவாக சொல்லி விட்டார்’ என கூறியிருந்தார்.

அதற்கு ஆதி பதிலடி தரும் வகையில் ‘சார், இதெல்லாம் தப்பு. எனது படத்தை சில போஸ்டர்களில் சிலர் தவறாகப் பயன்படுத்தியதால்தான் நான் வெளியேறினேன். போராட்டம் வெற்றி பெறும் வரை இளைஞர்கள் தங்களது போராட்டத்தைத் தொடர்வார்கள்’ என கூறியுள்ளார்.