Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அன்று நான் உயிரோடு இல்லை! இன்று உங்களோடு ஆர்.ஜே.பாலாஜி

நிரந்தர சட்டத்தால் ஜல்லிக்கட்டு போராட்டம் பல மாணவர்களால் கைவிடப்பட்டது. சில இடங்களில் நடந்த வன்முறை சம்பவத்தால் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த சில முக்கிய நடிகர்கள் வருத்தமடைந்தனர்.

இருந்தாலும் மாணவர்கள் வன்முறையில் ஈடுபடவேண்டாம் என சில தொடர்ந்து அவர்கள் வலியுறுத்தி வந்தனர். நிரந்தர தீர்வு வந்துவிட்டது போராட்டத்தை கைவிடுங்கள் என ஆர்.ஜே.பாலாஜியும் கூறியிருந்தார்.

ஆரம்பம் முதலே ஆதரவு தெரிவித்து வந்த இவர் சற்றுமுன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் 1940 களில் நடந்த போராட்டத்தின் போது நான் உயிரோடு இல்லை. இப்போது நடந்த போராட்டதின் போது நான் உயிரோடு இருந்ததை நினைத்து பெருமைப்படுகிறேன்.

இந்த போராட்டத்தின் வெற்றி உங்களுக்கே. உங்களுக்கு மட்டுமே. உங்களோடு சேர்ந்து போராடியதை அதிர்ஷ்டமாக நினைக்கிறேன்.

உங்கள் ஒவ்வொருவரின் மரியாதைக்கும், ஒற்றுமைக்கும் என் சல்யூட். வரலாறு உங்களுடையதே என பதிவிட்டிருந்தார்.