Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சாத்வீக போராட்டத்தில் சண்டை மூட்டியவன் எவன்? இயக்குனர் பாரதிராஜா கேள்வி

தமிழரின் வரலாற்றை சொல்லும் ஜல்லிக்கட்டு என்னும் கலாச்சாரத்தின் வீர விளையாட்டை மீட்டுவிட்டோம். தமிழர்கள் அனைவரும் கொண்டாடவேண்டிய நேரத்தில் சில எதிர்பாராத அசம்பாவிதங்கள் நடந்துவிட்டன.

உணர்ச்சிமிகு வார்த்தைகளால் போராட்டக்காரர்களுக்கு உற்சாகமூட்டிய இயக்குனர் பாரதிராஜா எதிர்பாராமல் நடந்த சில சம்பவங்கள் குறித்து தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

அவர் பேசியபோது ஜல்லிக்கட்டு போராட்ட வெற்றியின் மூலம் வரலாறு மீட்டெடுக்கப்பட்டது. சாத்வீகமாக நடந்த பேரணியில் சண்டை மூட்டியது யார்?

உன் வெற்றி வெளிச்சத்தில் வன்முறை என்னும் இருட்டு இடம் தேடுகிறது. கருப்பு நிறம் கொண்ட வன்முறை கயவர்களின் முகத்திரையை கிழித்தெறி.

குடியரசு தினத்தில் ஏற்றப்படும் கொடி உன் வெற்றி கொடி. வாடி வாசலில் காளைகள் திமிறி வரட்டும். வாழ்க தமிழ், மீண்டது திமில் என அவர் சொல்லியிருந்தார்.