Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

களத்தில் போராட்டகாரர்களுக்காக கண்ணீர் விட்ட நடிகர் ஆரி!

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நேற்று நடந்த சம்பவத்தை யாராலும் நினைத்துப்பார்க்காமல் இருக்க முடியாது. வேறு நோக்கத்தோடு நுழைந்த சிலரால் அறவழிப்போராட்டம் அலங்கோலமானது.

நடிகர் ஆரி போராட்டம் தொடங்கிய முதல் நாளே களத்திற்கு சென்றிருந்தார். மதுரை அலங்காநல்லூர் வாடி வாசலுக்கு செல்ல முயன்றபோது அவரை தடுத்து காவல்துறை கைது செய்தது .

தொடர்ந்து சென்னை மெரினாவில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டு அங்கேயே இருந்தார். ஆனால் நேற்று கடற்கரையில் கூடியிருந்த போராட்டக்காரர்களை காவல்துறை தடியடி நடத்தி கலைத்தது.

அப்போது அங்கிருந்து நேரில் நடந்த சம்பவத்தை பார்த்த நடிகர் ஆரி, மாணவர்கள் மீதும், பெண்கள், வயதானவர்கள் என அனைவரின் மிதும் விழுந்த தாக்குதலை கண்டு மிகவும் கண்கலங்கியுள்ளார்.