Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மூன்றாம் நம்பர் நடிகைக்கு வந்த வினை! புதிய பிளான்

சமீபத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்து முடிந்தது. இதற்கு பலர் ஆதரவு அளித்திருந்தாலும், சிலருக்கு எதிர்ப்பு கிளம்பியது. அதிலும் ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான விலங்கு நல அமைப்புக்கு ஆதரவாக இருப்பதாக சொல்லப்பட்ட சினிமா பிரபலங்கள் சிலருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டரும், பாடை கட்டி இறுதி அஞ்சலியும் நடத்தி எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

அதிலும் போராட்டம் ஆரம்பமான நாள் முதலே மூன்றாம் நம்பர் நடிகைக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. அவர் ஷூட்டிங் தளத்திற்கு சென்ற போது அங்கே சென்ற போராட்ட குழு அவரை விரட்டியது.

பின் நான் அப்படியெல்லாம் சொல்லவில்லை. யாரோ என் அக்கவுண்ட்டை ஹேக் செய்து விட்டார்கள் என் காவல்துறைக்கு புகார் கொடுத்திருந்தாலும் இதை போராட்டக்காரர்கள் யாரும் ஏற்கவில்லை.

ஒரு பக்கம் அவர் படம் இனி தமிழ்நாட்டில் ஓடாது, தமிழ் சினிமாவில் நடிக்கமுடியாது என சிலர் கோஷங்கள் போட விசயம் பெரிதானது. இப்போது அந்த நடிகை தமிழ் சினிமாப்பக்கம் சில நாட்களுக்கு நடிக்கவேண்டாம் என முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

காரணம் அந்த விலங்கு நல அமைப்பு தங்களுக்கு எதிராக செயல்பட்டால் அவர்களின் பெயரை வெளியிடுவோம் என சொன்னதாக சொல்லபடுகிறது. இதனால் அதிலிருக்கும் இவரை போன்ற சிலர் முழிக்கிறார்களாம்.