Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பெற்றோர்கள் ப்ளிஸ் அதை செய்யாதீங்க! பாடகி சின்மயி

பாடகி சின்மயி சமூக நலத்திற்காக தன்னுடைய கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். ஜல்லிக்கட்டுக்கு தனது ஆதரவையும் வெளிப்படுத்தினார்.

இன்று தேசிய பெண் குழந்தைகள் தினம். அதனால் அனைத்து பெற்றோர்களும் தங்களது குழந்தைகளுக்கு முன்னால் தகாத வார்த்தைகளில் பேசாதீர்கள் என கேட்டுக்கொண்டுள்ளார் அவர். சில 8 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சிலர் தகாத பேச்சுகளையும் பேசுகிறார்கள்.

அப்படியான குழந்தைகளால் நீங்கள் சரியான பெற்றோராக இருக்க தவறிவிட்டீர்கள் என்பதை காட்டுகிறது. பின்னாளில் அவர்களும் உங்களை சரியாக நடத்த மாட்டார்கள். இது அப்படியே தொடரும்.

இப்போது அதை பார்த்து ரசிப்பவர்கள், கைதட்டி சிரிப்பவர்களின் குழந்தைகளும் அப்படியே தான் இருக்கும். அதுபோல செய்யாதீர்கள் என அவர் கூறியுள்ளார்.