Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அந்த 32 பேரை கருணையுடன் விடுவியுங்கள்! இயக்குனர் அமீர்

இயக்குனர் அமீர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் முழுமையாய் கலந்து கொண்டு ஆதரவளித்து வந்தார். இவரையும் காவல்துறை சிறை பிடித்தாலும் தொடர்ந்து அவர் போராடி வந்தார்.

படத்தில் மட்டும் சமூகப்பிரச்சனைகளுக்காக போராடாமல் நிஜத்திலும் சமூக அக்கறையுடன் குரல் கொடுப்பவர். ஜல்லிக்கட்டு விசயத்தில் போராட்டம் நேற்றோடு அதிகாரப்பூர்வமாக முடிவடைந்தது.

மக்கள் மீது தாக்குதல் நடத்தி இருக்கக்கூடாது. இன்னும் அலங்காநல்லூரில் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் அவர்களை காவல்துறை கைது செய்து வைத்துள்ளதாக எனக்கு தகவல் வந்தது.

நான் அரசிடம் கைது செய்யபட்டுள்ள 32 பேரை நிபந்தனையின்றி விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன், அவர்கள் வயது தூண்டலாலும், அனுபவமின்மையாலும் வந்திருக்கலாம்.

அதனால் அவர்களை கருணையுடன் விடுதலை செய்யுங்கள் என கேட்டுள்ளாராம்.