Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் வாழ்வில் மறக்க முடியாத மைல்ஸ்டோன்? என்ன தெரியுமா

அஜித் இன்று சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். சாதிக்கிறார், சாதித்துக்கொண்டிருக்கிறார் என்றால் பல சோதனைகளை சந்தித்திருக்கிறார் என நாங்கள் சொல்லி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்யதில்லை தானே.

ஆரம்ப காலத்தில் அவர் சினிமாவில் இருந்ததற்கும் இப்போதைய நிலைக்கும் நிறைய முன்னேறங்கள் இருக்கிறது என்பதை அவரின் உழைப்பும், குணங்களும் காட்டுவதற்கு உதாரணமாக அவரோடு பணியாற்றிவர்கள் சொல்லக்கேட்டதுண்டு.

சோதனையான நேரத்தில் பல சிக்கல்கள், சில தடைகளை தாண்டி கே.எஸ்.ரவிக்குமார் இயகத்தில் அஜித் நடித்த வரலாறு அக்டோபர் 2006 ல் வெளியானது. அவரின் வாழ்வில் மைல்ஸ்டோனை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்.

தோல்விப்படங்கள், ஃபிளாப் படங்கள் வந்த நேரத்தில் அஜித்க்கு இது மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக சாதனை படைத்தது. மேலும் இதில் அவரின் கெட்டப்கள் ஒவ்வொன்றும் மிகுந்த வரவேற்பை பெற்றது.

11 வருடங்களுக்கு பிறகு இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய பேச்சுவார்தை நடைபெறுகிறது. இதில் ஜுனியர் என்.டி.ஆர் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகின்றது, மேலும் அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.