Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விக்ரம் வேதா டீசர் எப்படியிருக்கு? ஒரு பார்வை

விஜய் சேதுபதி, மாதவன் கூட்டணி முதல் முறையாக விக்ரம் வேதா படத்தின் மூலம் இணைந்துள்ளனர். படத்தின் டீசரை Y Not Studios சற்றுமுன் வெளியிட்டுள்ளது.

படத்தின் டீசரை பார்க்கும் போதே ஒரு அழுத்தமான கதை இருக்கும் என தோன்றுகிறது. ஆரம்பத்தில் பெரிய விசாரணை நடைபெற மாதவனின் கேள்விக்கு விஜய் சேதுபதியை பதில் சொல்லுவிதம் ஹாட்.

எப்போதும் கையில் துப்பாக்கியுடன் உலவும் மாதவன் பெரிய போலிஸ் அதிகாரியாக இருப்பார். விஜய் சேதுபதி துறைமுகம் சம்மந்தப்பட்ட ஏதோ பெரிய தொழில் செய்கிறார் என்றும் தெரிகிறது.

ஹார்பர் குடோனில் நடக்கும் இவர்களுடைய யுத்தம் கடற்கரையில் வலுவாக நடக்கிறது. கையில் அரிவாளுடன் சட்டையில் ரத்தக்கரையுடன் விஜய் சேதுபதி நடந்துவர மாதவனுக்கு ஏதும் ஆபத்தா, அவருக்கு என்ன ஆனது என கேள்வி எழுப்புகிறது.

மேலும் இவர்களில் யார் விகரம் யார் வேதா, இவர்களின் இடையில் நடக்கும் யுத்ததின் பின்ணனி என்ன பல கேள்விகள் எழுகிறது.

கிரைம் திரில்லர் கதையாக இயக்குனர் புஷ்கர் காயத்திரி என்ன சொல்லப்போகிறார் என பொறுத்திருந்து பார்ப்போம்.