Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் ரசிகர்களை தொடர்ந்து களத்தில் குதித்த விஷால்

விஷால் நடிப்பது மட்டுமின்றி, தன் தேவி அறக்கட்டளை மூலம் பல்வேறு மக்கள் நலபணிகளை செய்து வருகிறார்.

தல அஜித்தின் மதுரை ரசிகர்கள் சென்ற வாரம் அவர்கள் பகுதியில் உள்ள சீமை கருவேல மரங்களை வெட்டி அழிக்கும் முயற்சியில் இறங்கினர். நிலத்தடி நீரை அது உறிஞ்சுவதால் இதற்கு சமூக வலைத்தளத்தில் அவர்களுக்கு பாராட்டு குவிந்தது.

இந்நிலையில் நடிகர் விஷாலும் இதே முயற்சியில் தற்போது இறங்கியுள்ளார். சிதம்பரம் நகராட்சி பரங்கிப்படை ஊராட்சியில் ஒன்றியம் சி.கொத்தங்குடி ஊராட்சியில் நடிகர் விஷால் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து கருவேல மரங்களை வெட்டும் பணியில் இன்று ஈடுபட்டனர்.