படத்திற்கு பாலபிஷேகம் செய்துவிட்டு, காலால் உதைத்தால் எப்படி? பிரபல நடிகை கேள்வி
சமூக வலைத்தளங்கள் வந்த பிறகு நடிகர்களை கலாய்த்து, திட்டி பதிவிடுவது சிலரின் பொழுதுபோக்காகவே மாறிவிட்டது.
நடிகர்கள் உண்மையான அக்கறையுடன் பேசினாலும் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். சமீபத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம், அரசியல் குழப்பம் போன்ற விஷயங்களில் பல நடிகர்கள் வெளிப்படையாகவே கருத்து கூறினார்கள்.
அப்போது சிலர் 'நடிகர்களுக்கு என்ன தெரியும்? அவர்கள் ஏன் அரசியல் பற்றி கருத்து பேசுகிறார்கள்?' பல்வேறு குரல்கள் ஒலித்தது.
அதற்கு பிரபல நடிகை ஸ்ரீப்ரியா பதிலடி கொடுத்துள்ளார்.