Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என்னை கலங்க வைத்த அந்த ஒரு நாள்! ஷாருக்கான் உணர்ச்சிவசம்

மும்பை நட்சத்திர ஓட்டலில், பிரபல சினிமா இயக்குனர் யாஷ் சோப்ரா நினைவு தேசிய விருது வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவில் யாஷ் சோப்ரா நினைவு தேசிய விருது இந்தி நடிகர் ஷாருக்கானுக்கு வழங்கப்பட்டது.

இந்த விருதினை மாநில கவர்னர் வித்யாசாகர் ராவ், நடிகை ரேகா ஆகியோர் இணைந்து ஷாருக்கானுக்கு வழங்கினர். விழாவில் நடிகர் ஷாருக்கான் பேசியதாவது:-

கடந்த 25 ஆண்டுகளாக நடித்து வருகிறேன். எனக்கு தெரிந்தது எல்லாம் காலையில் மேக்-அப் போட்டு நடிப்பது மட்டும்தான்.

நான் மும்பைக்கு வந்தபோது, எனக்கு தாயும் இல்லை. தந்தையும் இல்லை. இருந்த ஒரு சகோதரிக்கோ உடல்நலம் சரியில்லை. அப்போது எனக்கு என்று ஒரு குடும்பமும் இல்லை.

ஆனால் இந்திய சினிமா உலகம் இருகரங்களாலும் அரவணைத்து, என்னை தத்து எடுத்துக்கொண்டது. ஆனால் இன்றைக்கோ நான் 100 கோடிக்கும் அதிகமான மக்களைக் கொண்ட குடும்பத்தைப் பெற்றிருக்கிறேன். இதற்காக நான் அனைவருக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

இது என் வாழ்க்கையில் மிக முக்கியமான தருணம். நான் வாழ்க்கையில் சந்தித்த எல்லோரும் என்னிடம் காட்டிய அன்பு, அக்கறை, பரிவு, ஊக்கம் என இவை அனைத்தும் இல்லையென்றால், இந்த அளவிற்கு உயர்ந்திருக்க முடியாது என கூறினார்.