Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

திருமணத்தை ஏன் நிறுத்தினேன் தெரியுமா? உண்மையை சொன்ன பாடகி விஜயலட்சுமி

வைக்கம் விஜயலட்சுமி தனது இனிமையான குரலால் அனைவரின் காதுகளையும் வசீகரமாக்கியக்கியவர். சமீபத்தில் இவர் பாடிய சொப்பன சுந்தரி பாடல் பலரையும் கவர்ந்தது.

மலையாளத்தை பூர்வீகமாக கொண்டாலும் தமிழ் பாடல்களை மிகத்தெளிவாக பாடக்கூடியவர். இவருக்கும் சந்தோஷ் என்ற இசை பிரமுகருக்கும் அடுத்த மாதம் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யட்டது.

பின் சில காரணங்களால் திடீரென ரத்து செய்யப்பட்டது. இது பலருக்கும் மிகுந்த வருத்தமே. ஆனால் விஜயலட்சுமி தான் இப்போது தான் நிம்மதியாக இருக்கிறேன் என சொன்னது அதிர்ச்சியாக இருக்கிறது.

அவர் தற்போது வெளியிட்டுள்ள தகவலில் சந்தோஷ் எனக்கு சினிமா சான்ஸ் தொடர்ச்சியாக வராது. உத்திரவாதமும் கிடையாது. எனவே அரசு இசை பள்ளிக்கூடத்தில் சேர்ந்து டீச்சர் ஆகிவிட்டால் கடைசி வரை சம்பளம், பென்ஷன் வரும் என கூறினார்.

இது என் மனதிற்கு மிகவும் சங்கடமாக இருந்தது. நிச்சயதார்த்தத்துக்கு முன் பேசியபடி இல்லாமல் திடீரென மாற்றிப்பேசுகிறார். இசையை விட திருமணம் பெரியதாக தெரியவில்லை. எனவே இப்படியொரு முடிவை எடுத்துவிட்டேன் என கூறியிருகிறார் விஜயலட்சுமி.