Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நிகழ்ச்சியை மாற்றினார் டிடி, ஏன்?

சின்னத்திரையில் டிடி ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் அதை பார்க்க ரசிகர்கள் கூட்டம் தனியாக இருக்கும். அந்த வகையில் டிடி நடத்திய காபி வித் டிடி நிகழ்ச்சியின் ஹிட் நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

விஜய், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ், ஆர்யா, விஜய் சேதுபதி என அனைத்து நடிகர்களையும் தன் நிகழ்ச்சிக்கு அழைத்து செம்ம கலக்கலாக ஷோ நடத்துவார்.

நீண்ட நாட்களாக இந்த நிகழ்ச்சி தொடங்காமல் இருக்க, தற்போது ஏப்ரல் 14ம் தேதி முதல் மீண்டும் தொடங்கவுள்ளது.

ஆனால், நிகழ்ச்சியில் பெயர் காபி வித் டிடி இல்லை, அன்புடன் டிடி என்று மாற்றியுள்ளார்கள், ஏன் நிகழ்ச்சியின் பெயரை மாற்றினார்கள் என்பது கேள்விகுறியாகியுள்ளது.