Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கமல்ஹாசன் மீது பெங்களூர் போலிஸ் நிலையத்தில் புகார்- அதிர்ச்சி தகவல்

கமல்ஹாசன் எந்த பிரச்சனைகளிலும் தலையிடாமல் அவர் வேலையில் தான் கவனம் செலுத்துவார். ஆனால், ஒரு சிலர் வேண்டுமென்றே தங்கள் விளம்பரத்திற்கு அவர் மீது வழக்கு போடுவார்கள்.

அதேபோல் சமீபத்தில் கமல் மஹாபாரதத்தை இழிவுப்படுத்திவிட்டார் என ஒரு சில இந்து அமைப்பினர் புகார் கொடுத்தனர்.

தற்போது இந்த பிரச்சனை பெங்களூர் வரை வெடித்துள்ளது, பெங்களூரில் உள்ள போலிஸ் நிலையம் ஒன்றில் மஹாபாரதத்தை கமல் இழிவுப்படுத்தியதாக கூறி புகார் கொடுத்துள்ளனர்.

இந்த புகாரின் பேரில் விரைவில் அவர் மீது விசாரணை நடத்தப்படும் என போலிஸார் கூறியுள்ளனர்.