ரஜினிகாந்த் பேசாமல் இருந்தாலும் அவரை சுற்றி அரசியல் பேசிக்கொண்டே தான் உள்ளனர். அப்படித்தான் சமீபத்தில் ரஜினி இலங்கை செல்லவிருந்தார்.
அவர் அங்கு போகக்கூடாது என திருமாளவன், வைகோ ஆகியோர் எதிர்த்தனர், இதை தொடர்ந்து ரஜினி பயணம் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே ‘ரஜினிகாந்த் ஏழை இலங்கை தமிழ் மக்களுக்கு உதவ தான் வருகிறார்.
ஆனால், தமிழக அரசியல்வாதிகள் சிலர் தங்கள் சுயலாபத்திற்காக இதை திசை திருப்பியுள்ளனர்.
தமிழகத்தில் தேர்தல் வரும் போதும் மட்டும் தான் அவர்கள் கண்களுக்கு இலங்கை தமிழர்கள் தெரிவார்கள்’ என கூறியுள்ளார்.
True nature of Tamil Nadu politicians is revealed again. They won't allow anyone, even @superstarrajini, to help #SriLanka's Tamil people.
— Namal Rajapaksa (@RajapaksaNamal) March 25, 2017