Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முன்னணி நடிகருக்கு ஜோடியாக நிவேதா தாமஸ்- ரசிகர்கள் உற்சாகம்

நவீன சரஸ்வதி சபதம், ஜில்லா, பாபநாசம் ஆகிய படங்களில் தமிழில் தலையை காட்டியவர் நிவேதா தாமஸ். இவருக்கு தமிழில் பெரிதும் எந்த படமும் கைக்கொடுக்கவில்லை.

இந்நிலையில் தெலுங்கு பக்கம் சென்ற இவருக்கு ஜெண்டில் மேன் படம் வேறு லெவல் வரவேற்பை கொடுத்தது.

இதை தொடர்ந்து பல கதைகள் இவரை தேடி வர, எதிலும் கமிட் ஆகாமல் நீண்ட நாள் இருக்க, தற்போது முன்னணி நடிகர் ஒருவர் படத்தில் கமிட் ஆகியுள்ளார்.

அவர் வேறு யாரும் இல்லை தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ஜுனியர் என்.டி.ஆர் அடுத்து நடிக்கும் படத்தில் இவர் தான் ஹீரோயினாம்.

இதை சந்தோஷமாக இவரே தன் டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார், மேலும், இவருடைய ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.