Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பெண்களுக்கு என்ன தலைவிதியா? டிடி உணர்ச்சிவசம்

பிரபல தொகுப்பாளராக இருந்து நடிகையாக மாறியிருக்கிறார் டிடி. அவரின் குறும்புத்தனமான பேச்சுக்கும், தடாலடியான சிரிப்புக்கும் பல ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இவர் சமீபத்தில் வார இதழுக்கு பேட்டி கொடுத்துள்ளார். இதில் சமையல் பற்றி அவரிடம் கேட்டபோது:-

எனக்கு சமையல் தெரியாது, திருமணத்திற்கு பிறகு நூடுல்ஸ் செய்ய தெரிந்துகொண்டேன், அவ்வளவு தான்.

பெண்கள் தான் சமைக்க வேண்டும் என விதி இருக்கிறதா, பெரிய உணவகங்களில் ஆண்கள் சமைக்கிறார்கள்.

சம்பளம் வாங்கும் இடங்களில் ஆண்கள் சமைக்கணும், வீட்டில் பெண்கள் சமைக்கணுமா?

சமையல் கிளாஸ் போனேன், 5 நாள் தான், ஒருநாள் தூங்கிவிட்டேன், மேடம் என் அக்காகிட்ட புகார் பண்ணிட்டாங்க.

அக்கா என்ன திட்ட, தூக்கம் வந்துச்சு தூங்கினேன்னு சொன்னேன், அதோட கிளாஸ் ஓவர் என சிரிப்புடன் கூறியுள்ளார் டிடி.