Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் பட பாடகருக்கு வந்த சோதனை!

அஜித் நடித்த படங்களில் கடந்த 2007 ம் ஆண்டு கிரீடம் படம் வெளியானது. இதில் விழியில் உன் விழியில் என்ற பாடலை பாடியவர் சோனு நிகம். ஹிந்தி கன்னடம் தெலுங்கு என பல படங்களில் தன் பாடல்களை கொடுத்துள்ளார்.

பாலிவுட்டை சேர்ந்த அவர் தமிழில் சில முக்கிய படங்களில் பாடியுள்ளார். சமீபத்தில் அவர் சமூகவலைதளத்தில் கோவில், மசூதி, குருத்வாராக்கள் என ஒலிபெருக்கிகள் மூலம் பிராத்தனை செய்வது கட்டாயமாக மதத்தை புகுத்துவதாக நினைக்கிறேன் என கருத்தை வெளியிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இஸ்லாமிய தலைவர் சோனுவின் தலையை மொட்டை அடுத்து வருபவர்களுக்கு ரூ. 10 லட்சம் பரிசு என சொன்னது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால் சோனு தானே மொட்டை அடித்து கொண்டு தன் கருத்தில் உறுதியாக இருக்கிறேன். அவர் சொன்ன பரிசுக்காக மொட்டை போடவில்லை என கூறியுள்ளார்.