Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மலையாள சூப்பர் ஸ்டாரை கிண்டலத்த பாலிவுட் நடிகர்! சர்ச்சை வீடியோ

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ரூ.1000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் மகாபாரதம் படத்தில் பீமனாக நடிக்கிறார் என தகவல்கள் வேகமாக பரவியது.

இதை கவனித்த பாலிவுட் நடிகர் கமால் ஆர் கான் தனது ட்விட்டரில் மக்களே இந்த சோட்டா பீமை பாருங்க. இவர் பீமனாக நடித்தால் அது பீமனுக்கு பெரிய அவமானம் என கூறி மோகன் லாலின் புகைப்படத்தை வெளியீட்டிருந்தார்

ஒரே சூப்பர் ஸ்டார் பிரபாஸ் மட்டுமே பீமனாக நடிக்க முடியும், என கூறினார். இதனால் கோபமான மோகன்லால் ரசிகர்கள் இவரை திட்ட, உடனே என்னை திட்டுவதை நிறுத்திவிட்டு அவர் பொது நிகழ்ச்சியில் எப்படி நடந்து கொண்டார் என நீங்களே பார்த்து சொல்லுங்கள் என கூறி ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.

மேலும் ராணா - துரியோதனன், ஷாருக்கான் - கர்ணன், ரன்பீர் - அபிமன்யூ, அமீர் கான் - அர்ஜுனன், தீபிகா - திரௌபதி, நான் - கிருஷ்ணன் ஆகியோர் நடிக்க வேண்டும் என அவர் கூறினார்.